எல்.சி மருந்துவமனையின் புதிய கிளை பழனியில் துவக்கம்

வயிறு மற்றும் மகளிர் நலனில் லேபராஸ்கோமி மற்றும் என்டோஸ்கோபி சிகிச்சைகளில் தனிமுத்திரை பதித்துவரும் கோவை எல்சி மருந்துவமனை, தனது 10 ஆவது ஆண்டின் நிறைவு நாளில் தங்களது கிளையை பழனியில் விரிவுபடுத்தி உள்ளனர்.

மருந்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வித்யா
தலைமையில் இயங்கி வரும் எல்சி மருத்துவமனை ஹெர்னியா, உணவுப்பாதை என்டோஸ் கோபி பிரிவு, மகளிர் நலம் ஆகிய சிறப்புத் துறைகளை முன்னெடுத்து ஒருநாள் அறுவை சிகிச்சை முறைகளில் தனித்து விளங்கிவருகிறது.

இதன் பழனி கிளையை கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் நிர்மலா மற்றும் பழனி சித்தனாதன் சன்ஸ் நிறுவனர் சிவனேசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

திறப்பு விழாவில் பழனி நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் வேல்முருகன், விஜய் காட்டன்ஸ் தலைவர் அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்

எல்சியின் மருத்துவர்கள் குழு செந்தில்நாதன், ரேவதி, கார்த்தி, முகிலன், கார்த்திகேயன், அனைத்து ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் இந்தக் கிளை பழனி மக்களின் சேவைக்காக செயல்படும் என எல்சியின் தலைவர் டாக்டர் ராஜன் தெரிவித்தார்.