நூர் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா

கோவை அவிநாசி சாலை விரியம்பாளையம் பகுதியில் நூர் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நடிகரும் தொழிலதிபருமான லெஜன்ட் சரவணன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மணப்பெண்களுக்கான நவீன மேக்கப் சாதனங்களை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பிரைடல் மேக்கப் நிறுவனத்தின் உரிமையாளர் நூர் வரவேற்புரை வழங்கினார்.

மேலும் திறப்பு விழாவில், நடிகர்கள் ரோபோ சங்கர், அப்புகுட்டி மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய சரவணன், நூர் முகம்மதுவின் கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது எனவும், பொதுவாக கடுமையாக உழைப்பவர்களையும், தொழிலை நேசிப்பவர்களையும் நான் நேசிப்பேன் என்றும் எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.

ஆனால் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு மேக்கப் துறை முக்கிய பங்கு வகிப்பதால் அதனை முழுமையாக நேசித்து நூர் முஹம்மது சேவை செய்து வருகிறார். அவரது அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லெஜண்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படம் தயாராகி வருவதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். தான் அரசியலில் ஈடுபடுவது என்பது மக்களின் கையிலும் மகேசனின் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் தற்போது ஆட்சி சிறப்பாக உள்ளது எனவும் கூறினார்.