எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி பூப்பந்து போட்டியில் வெற்றி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பூப்பந்து போட்டி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணியினரும் முதலிடத்தை பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அனைத்து கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சேர்ந்து வீரர்களுக்கு பரிசளித்தனர்.