இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு

முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதியில் முடிவடைந்தது. இதில் பி.டி.உஷா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று நடந்த வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த 58 வயதான பி.டி.உஷா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாகும்.