திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவரது தலைமையில், ஏராளமான இளைஞர் அணியினர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.