மாண்டஸ் புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுகின்றன. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சென்னை

2. செங்கல்பட்டு

3. விழுப்புரம்

4.கடலூர்

5. திருவள்ளூர்

6. காஞ்சிபுரம்

7. வேலூர்

8. ராணிப்பேட்டை