‘மாண்டஸ்’… புயலுக்கு பெயர் வைக்க காரணம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றதையடுத்து, அதற்கு மாண்டஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் ஏன் இந்த பெயர் வந்தது என்பதை பற்றி  காணலாம்.

2004ஆம் ஆண்டு தான். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் நிலை ஏற்பட்டதால், எந்த புயல், எந்த திசையில் வருகிறது என்பதை அறிவதற்கு பெயர்கள் சுடப்பட்டன.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பில், அங்கம் வகிக்கும்  நாடுகளின் எண்ணிக்கை 191. இந்த நாடுகளை 7 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு பெயரிட்டுள்ளது,

வெப்ப மண்டல புயல்களை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் ஆசியா பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், மியான்மர் ஆகிய 13 நாடுகள் பெயர்களை தேர்வு செய்து வழங்கியிருக்கின்றன.

அந்தவகையில் ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்கள், மொத்தம் 169 பெயர்கள் உலக வானிலை அமைப்பிடம் வழங்கப்பட்டது

அதன் அடிப்படையில் சுழற்சி முறையில் பெயர்கள் புயல்களுக்கு சூட்டப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் வங்கக்கடலில் நேற்று உருவான புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தேர்வு செய்து வழங்கியிருந்த ‘மாண்டஸ்’ என்ற பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் சூட்டியிருக்கிறது.

இதற்கு அரபு மொழியில் ‘புதையல் பெட்டி’ (டிரெசர் பாக்ஸ்) என்று பொருள்.

இதனைத் தொடர்ந்து அடுத்து உருவாக கூடிய புயலுக்கு ’மேகா’ என்ற என்ற பெயரையம் (அதை ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்து) சுடப்பட்டுள்ளதது .