WhatsApp Avatars:  புதிய அப்டேட் வசதி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துவதற்கும் தகவல் தொழிநுட்பகத்தை பகிர்வதற்கு

WhatsApp ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.  இது தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்-அப் செயலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பொதுமக்களிடையே பயன்பாடு குறைந்தபாடு இல்லை.

பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்-அப் நிறுவனம் பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருகின்றது. இப்போது வாட்ஸ் அப்-இல் அவதார் ஸ்டிக்கர் அப்டேட் (Meta’s Avatar feature) வெளியாகியுள்ளது.

வாட்ஸ்-அப் அவதார் ஃபீச்சர்:

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஓ.எஸ். – களில் உள்ள பீட்டா வர்ஷனில் மெட்டா அவதார் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ஒரு சிலருக்கு, மற்றும்  வாட்ஸப் பீட்டா பயனாளர்களுக்கு  மட்டுமே இந்தச் சேவை  கிடைத்திருந்தது . சில நாட்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவரும் அவதார் ஸ்டிக்கர்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ் அப் செட்டிங்ஸ் பகுதியில் ‘அக்கவுண்ட்ஸ்’ பிரிவுக்கு கீழே ‘அவதார்’ என்று புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து   உங்கள் அவதாரை உருவாக்கி கொள்ளலாம். இனி ஃபேஸ்புக், ஸ்நாப்சாட் போலவே வாட்ஸ் அப்பிலும் அவதார் வசதியை பயன்படுத்தலாம்.