இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘டாப் 10’ வார்த்தைகள்!

2022 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுளை நாம் பெரும்பாலும் நம்பியுள்ளோம். கூகுள் தேடுபொறியில் உலகத்தின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும், தரவுகளும் ஏராளமாக குவிந்துள்ளன.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பெற்றுள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா – இங்கிலாந்து (India vs England) சொல் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் எனும் சொல் 3 வது இடம் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5 வது இடத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6 வது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7 வது இடத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 8 வது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9 வது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10 வது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது.