அமெரிக்காவில் 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற வாலிபர்

அமெரிக்காவில் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில் 18 வயது வாலிபர் வெற்றி பெற்று வரலாறு படைத்து உள்ளார்.

ஜெயிலன் ஸ்மித் சமீபத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்

ஸ்மித்தை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெறுகிறார் ஸ்மித் .

தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் இது குறித்து வெளியீட்டுள்ள செய்தியில், இயர்லி நகரின் சிறந்த அத்தியாயத்தை கட்டமைக்கும் தருணம் இது. மேலும் எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசரகாலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விசயங்களை முன்னிலைப்படுத்தி ஸ்மித் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.