டில்லி தேர்தலில் வெற்றி: கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தொடர்ந்து மூன்று முறை டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டில்லியில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில், 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.

மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது.

இதேபோல நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அங்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி மதிய நிலவரப்படி பத்து இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்த இரண்டு வெற்றிகளையும் கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்ட ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் டோனி சிங் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் ஆண்டனி, தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் லோகேஷ் சுனில் சர்மா, பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளர் மனோஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.