வாஸ்து டிப்ஸ்! வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகளை வீட்டில் வைத்து பராமரிப்பது நிறைவான நலனைத் தரும்.

ஸ்நேக் ப்ளான்ட் : இது மிகக்குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் ஒரு செடி. இது இரவிலும் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றித்தரும்.  மேலும்,சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் நச்சுக்களை அகற்றும். இது நாசாவின் உயர் தர காற்று சுத்திகரிப்பு செடிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பீஸ் லில்லி : பீஸ் லில்லி செடியும் காற்றை சுத்திகரிக்கக் கூடியது. அறையில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஆனால் இந்தச் செடி விஷத்தன்மை கொண்டது. மேலும்  குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை.

லாவண்டர் : லாவண்டர் செடிகள் பொதுவாக எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றன. லாவண்டர் ஆயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதிற்கு அமைதி மற்றும் நல்ல தூக்கம் தரும்.

ஃபிலிப்பைன் எவர்கிரீன் : ஃபிலிப்பைன் எவர்கிரீன் செடியை சைனீஸ் எவர்கிரீன் என்றும் கூறுகின்றனர். இதனை வீட்டினுள் வளர்ப்பது எளிது. இதற்கு நிறைய சூரியஒளி தேவையில்லை.

இங்கிலிஷ் ஐவி : இது தோட்டச் செடிகளில் மிகவும் முக்கியமானது. இது காற்றில் உள்ள பென்சீன், ஸைலீன், ஃபார்மால்டிஹைட் ஆகியனவற்றை கலையும் என்று கூறப்படுகிறது. அதனால் இதனை படுக்கையறையில் வைப்பது உகந்ததாகும். இது பல ஒவ்வாமைகளில் இருந்து விடுவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெவில்ஸ் ஐவி : இதுவும் நாசாவின் உயர்தர காற்று சுத்திகரிப்பு தன்மை கொண்ட செடிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. காற்றில் உள்ள நச்சுத் தன்மையைஅகற்ற உதுவுகிறது.

ரப்பர் ஃபிக் : இது பார்ப்பதற்கு அழகான செடி மட்டுமல்ல இதில் எதிர்ப்புத் தன்மை நிறைவாக உள்ளது. இது காற்றை தூய்மைப்படுத்துகிறது.இதை  வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் எளிதானது. இதில் நிறைய ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன.

ஃபெர்ன்ஸ் : இது மற்றுமொரு அழகான செடி. இது காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட், ஸைலீன், டொலுவீன் ஆகியனவற்றை வடிகட்டி சுத்தமான காற்றாக தரும். இது அறையை சுத்தமாக வைக்க உதவும். இது ஒரு சிறந்த உள் அலங்கார செடி.

கற்றாழை : கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.  அதுமட்டுமில்லாமல்  கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” என்பது  “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இரவிலும் ஆக்சிஜன் தரக்கூடியது கற்றாழை.

சாமந்தி பூ : செவ்வந்திப் பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய செடியான இது, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்தத் தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

– பா. கோமதி தேவி