தீப ஒளியில் ஜொலித்த ஈஷா!

கார்த்திகை தீபத் திருநாளான இன்று சத்குரு அவர்கள் தியானலிங்கத்தில் விளக்கு ஏற்றினார். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சூர்ய குண்ட மண்டபம் மற்றும் லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆதியோகியில் சுற்றுவட்டார கிராம மக்கள் விளக்குகளை ஏற்றினர். இதனால் ஒட்டுமொத்த ஈஷாவும் தீப ஒளியில் ஜொலித்தது.