
தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்தைய கணக்கெடுக்கும் பணி துவக்கியது.
இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் மாமிச உண்ணிகள் புலி, சிறுத்தை, கருசிறுத்தை கால் தடங்கல், நக கீறல்கள், எச்சகள் வைத்து கணக்கு எடுக்கும் பணியும் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையில் காட்டுயானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும்.
இறுதியாக கணக்கெடுக்கும் பணி முடிவுற்று தேசியப் புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நவமலை பகுதியில் வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.