என்.ஜி.பி கல்லூரியில் இலக்கிய மன்றத் துவக்க விழா

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கோவை, பூ.சா.கோ. காலை அறிவியல் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் ரத்தினசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘கல்வியின் மூன்றாவது பரிமாணத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் பேசுகையில்: இலக்கிய மன்றங்களே மாணவர்களுக்கு வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத்தருகின்றன. சகிப்புத்தன்மை, தான் என்னும் அகந்தையற்ற மனநிலை, நகைச்சுவை உணர்வு, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் போன்றவற்றை மேம்படுத்துவதில் இலக்கியமன்றங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

கற்பித்தலை உயிரோட்டமுள்ளதாக ஆசிரியர்கள் மாற்றவேண்டும். மாணவர் விரும்பும் ஆசிரியராக திகழ வேண்டும். அப்போதுதான் கல்விச் செயல் முழுமையடையும். கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்கும் இதுபோன்ற இலக்கியமன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.