ஜெயலலிதா நினைவு நாள்: கோவையில் அதிமுகவினர் நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கோவை மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதய தெய்வம் மாளிகையில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி, தீபாராதனை செய்து கட்சியினர் வணங்கினர்.

 

இந்நிகழ்வில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், கழக தொண்டர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.