எஸ்.பி.ஐ வங்கியின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம் திறப்பு

கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் இன்ஸ்டிட்யூட்
ஆஃப் லேர்னிங் அன்டு டெவலப்மென்ட் மையத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

கோவையில் முதல் முறையாக இத்தகைய நவீனமயமாக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு
மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை, ஈரோடு,
சேலம், திருப்பூர், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி
யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுமார் 4000
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயன்தரும் வகையில் இந்த மையம்
அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தினை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா திறந்து வைத்தார்.