கே.எம்.சி.ஹெச் சார்பில் ‘கோவை மாரத்தான்’

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சார்பில் ‘புற்றுநோயை யாரும் தனியாக எதிர்த்துப் போராடுவதில்லை’ என்ற கருப்பொருளில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘கோவை மாரத்தான்’ 26 வது பதிப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

 

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலையில், கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தொடங்கிய மாரத்தான் கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மெயின் சென்டரில் முடிவுற்றது.

சுமார் 18 கிலோமீட்டர் கொண்ட இந்த ஓட்டத்தில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.