நேரு பிசியோதெரபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

நேரு கல்வி வளாகத்திலுள்ள நேரு பிசியோதெரபி கல்லூரியின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பி.பி.டி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.

நேரு பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் விஜயராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக சேலம், விநாயகா மிஷன் ஆய்வு மையம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கல்விப் புல இணை இயக்குனர் ராஜன் சாமுவேல் மற்றும் கோவை கே.ஜி. பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் மனோஜ் ஆபிரகாம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

சிறப்பு விருந்தினர்கள், பிசியோதெரபி கல்வியின் மகத்துவம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பிசியோதெரபியின் சேவை, பங்களிப்பினை குறித்தும், எதிர்காலத்தில் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறினர்.

அதன் பின்னர் நேரு கல்வி குழுமங்களின் முதன்மை செயல் தலைவரும், செயலாளருமான கிருஷ்ணகுமார் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார்.

இதனையடுத்து கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், உடற்கூறியல் மற்றும் பிசியோதெரபி சார்ந்த ஆய்வுக்கூடங்கள் சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டன.