இந்துஸ்தான் கல்லூரியில் பாரா த்ரோபால் போட்டி

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறையும், இந்திய பாரா த்ரோபால் அமைப்பும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது தேசிய அளவிலான பாரா த்ரோபால் போட்டியும், 14 வது தமிழக அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியையும் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இதில் உத்ரகாண்ட், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடாகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.