கோவையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் பந்தயசாலை பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் அரசு மற்றும் பல்வேறு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என 200 க்கும் மேற்ப்பட்டோர் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது மேளதாளங்களுடன் பந்தயசாலை சுற்றிலும் நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட சுகாதாரத்துறை அலுலவலர்கள் கலந்து கொண்டனர்.