இஸ்ரோவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) அறிவியலாளர்/ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 2022 டிசம்பர் 19 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scientist/Engineer ‘SC’ (Electronics)

காலியிடங்கள் – 21

கல்வி தகுதி: BE/ B.Tech in Electronics & Communication Engineering முடித்திருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’ (Mechanical)

காலியிடங்கள் – 33

கல்வி தகுதி: BE/ B.Tech in Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’ (Computer Science)

காலியிடங்கள் – 14

கல்வி தகுதி: BE/ B.Tech Computer Science Engineering முடித்திருக்க வேண்டும்.

19.12.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியிடங்களுக்கு https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 250, இருப்பினும் SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.