கோவையில் விரைவில் நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமி திறப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி வளாகத்தில் ‘நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமி’ எனும் பயிற்சி மையம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி துவங்க உள்ளது.

முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்க உள்ள நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர்கள் மோகன் சந்தர் மற்றும் உமா மோகன் ஆகியோர் அகாடமி குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கிரிக்கெட் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள பவுன்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து கோவையில் இந்த பயிற்சி மையத்தை துவங்க உள்ளதாக கூறினர். ஐ.பி.எல்.தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடிய வீரர் தியாகராஜன் இதில் முதன்மை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். உள்ளூரில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

முதல் கட்டமாக மூன்று வலை பயிற்சி மையங்கள் வாயிலாக சுமார் ஐம்பது பேர் வரை பயிற்சிகளை, சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வரும் 3 ஆம் தேதி நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.