வாடகை அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்

– கோவை மலர் வியாபாரிகள் கோரிக்கை

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட மலர் வியாபாரிகளின் சங்க தலைவர் செல்வகுமார் கூறுகையில்: பன்னீர்செல்வம் பூ மார்க்கெட் கட்டிடம் புணரமைத்து தங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மாநகராட்சி கடைகளுக்கு 10 ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் வாடகை செலுத்த முடியாத பட்சத்தில் 18 சதவீதம் அபராதத்தை மாநகராட்சி வசூல் செய்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கடந்த வாரத்தில் தலைமை நிலைய செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

இதனை ஆவணம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததற்க்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக கூறினார். பூ மார்க்கெட் கட்டிடத்தினை பார்வையிட்டு திட்ட மதிப்பீடு செய்து தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலஜிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.