3 சக்கர மின் வாகனத்தில் ஓர் புதிய அனுபவம் கோவையில் அல்டிகிரீன் ஷோரூம் துவக்கம்

இந்தியாவின் முன்னணி 3 சக்கர மின்வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், சக்தி சாரதா நிறுவனத்தை பங்குதாரராக கொண்டு கோவை கணபதியில் தனது புதிய ஷோரூமை துவக்கியுள்ளது.

பெங்களூருவை அடிப்படையாக கொண்டு 2013 இல் துவக்கப்பட்ட அல்டிகிரீன் வடிவமைப்பு, பொறியியலாக்கம் மற்றும் மின் வாகன உற்பத்தியை இந்தியாவிலேயே தயார் செய்கிறது. இந்த மூன்று சக்கர மின் வாகனம் நீண்ட தூரம் பயணம், அதிக பாரம், பெரும் இழுதிறனை பெற்றுள்ளது.

அல்டிகிரீன் நிறுவனம், மும்பை, புனே, பெங்களுரு, ஐதராபாத், அகமாதாபாத், சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் 10 வது அனுபவ மையத்தை கோவையில் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இரண்டாவது டீலர்ஷிப்பை கோவையில் ஆரம்பித்துள்ளது.

வாகன விநியோக டீலர்ஷிப்பில் சக்தி சாரதா குழுமம் கோவையில் நான்கு ஷோரும்களையும், 3 சேவை மையங்களையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறது.

இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

சக்தி சாரதா குரூப்சின் தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கினார்.

இரு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அல்டிகிரீன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் அமிதாப் சரண், சர்வதேச தரம் வாய்ந்த பன்னோக்கு வாகனங்களின் விற்பனையை கோவையில் சக்தி சாரதா ஏஜென்சியுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

இந்திய சாலைக்கு ஏற்றது!

சக்திசாரதா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தனசேகரன் பேசுகையில், இந்திய சாலைக்கு ஏற்றவாறும், ஓட்டுனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மைலேஜ் பயன்கள் ஆகியவற்றை துல்லியமாக கணித்து ஒரு பெரிய நிபுணர்கள் குழு வேலை செய்து இந்த மூன்று சக்கர மின் வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.

சமதளமான சாலை மட்டுமல்லாமல் மலை பகுதிகளிலும் இந்த வாகனத்தை இயக்கமுடியும். இதுவரை எந்த ஒரு நிறுவனமும் மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கென தனி ஷோரூமை கொண்டிருக்காத போது, அல்டிகிரீன் நிறுவனம் இது போன்ற அனுபவ மையத்தை தொடங்கியுள்ளது வரவேற்க்கத்தக்கது.

ஒரு லட்சம் கிலோ மீட்டர் அல்லது 3 வருடத்திற்கு பேட்டரி வாரண்ட்டி உள்ளது. மேலும் பேட்டரி உட்பட இந்த வாகனத்திற்க்கான அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது, எந்த ஒரு பொருளும் வெளிநாட்டில் இருந்து வாங்கப்படவில்லை. இந்த வாகனம் 60 நாடுகளில் 26 காப்புரிமைகளை பெற்றுள்ளது. இதுபோன்ற வாகனம் மூலம் கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்படுகிறது. இதன் விலை 4 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து 4 லட்சம் அறுபதாயிரம் வரை உள்ளதுடன், இதில் நான்கு மாறுபட்ட மாடல்கள் உள்ளன.

இந்த மின் வாகனத்தை (neEV) மூன்று மணி நேரம் 30 நிமிடத்திற்கு சார்ஜிங் செய்து 150 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். மேலும் எளிமையான சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது. பேட்டரிகள் 100 % பாதுகாப்பு தன்மை கொண்டது.

இந்திய சாலைகளில் ஒரு வாகனம் செல்லும்போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த மின் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு மோசமான சாலையில் சென்றாலும் வாகனம் மூட்டவோ அல்லது அடிபடவோ செய்யாது என்றார்.