நடிகர் விஜய் சேதுபதி சார்பில் கோவையில் 3 நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்

கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனங்கள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை கோவையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 22 துறைகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர். இதன் மூலம் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த முகாம் கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் https://jobfair.vvvsi.com எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடந்த முறை விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் புதுச்சேரியில் நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினால் 50 நிறுவனங்களுடன் ஆயிரத்திற்கும் மேலான வேலை தேடும் நபர்கள் பயனடைந்தனர். இந்த இயக்கம் மூலம் இதுவரை 1,20,243 நபர்கள் பயனடைந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.