வரும் ஞாயிறு கே.பி.ஆர் கல்வி நிறுவனம் சார்பில் ‘மினி மாரத்தான்’

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் மனநலம் பேணுதல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரும் டிசம்பர் 4 அன்று “மினி மாரத்தான் 2022” நடைபெறுகிறது.

5 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில், 5 கிலோ மீட்டர் பிரிவில் 6 முதல் 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகள், 6 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து வயது பெண்களும் பங்கேற்கலாம். இப்போட்டி கணியூர் சுங்கச்சாவடியில் இருந்து கே.பி.ஆர் கல்லூரி வரை நடைபெறும்.

8 கிலோ மீட்டர் தூர பிரிவில் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஆண்களும் பங்கேற்கலாம். இப்போட்டி கருமத்தம்பட்டியில் இருந்து கே.பி.ஆர் கல்லூரி வரை நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்த பரிசு ரூ.1 லட்சம் ரூபாயும், மெடல்களும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் 9514760473 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளவும்.

 

(இந்த தகவலை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது)