குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலியைத் தடுக்க இந்த  யோகாசனங்கள் ட்ரை பண்ணுங்க

குளிர்காலம் வந்தாலே உடல் எப்போதும் ஒருவித வலியுடன் இருக்கும்.  சூரிய ஒளி குறைவாக இருப்பதால், தசைகள் சுருங்கி விறைப்பாக இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும் போது உடலுக்குள் வெப்பத்தை உற்பத்தி செய்வதற்காக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

அப்படி உடலானது வெப்பத்தை உற்பத்தி செய்ய முயற்சிப்பதை வெளிக்காட்டும் ஓர் அறிகுறி தான் உடல் நடுக்கும்.

உடல் வலி மற்றும் விறைப்பை தடுக்க, சில யோகாசனங்களைக் தினமும் காலையில் செய்து வந்தால், குளிர்காலத்திலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

உத்தனாசனம் (Uttanasana)

நேராக நின்று பின் மெதுவாக முன்னோக்கி குனிய வேண்டும்.  அப்படி குனியும் போது உள்ளங்கைகளை தரையில் வைப்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும்   கால் பெருவிரல்களைத் தொடுவது போதுமானதாக இருக்கும்.

இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால்  உடல் ஆரோக்கியம் பெரும்.

பச்சிமோத்தனாசனம் (Paschimottanasana)

கால்களை நீட்டி நேராக அமர்ந்து, பின் மெதுவாக உடலை முன்னோக்கி முடிந்தவரை கொண்டு வந்து கால்களை கைகளால் பிடித்துக் கொண்டால், சற்று எளிதாக இருக்கும். இந்த நிலையில் உங்கள் வயிறு மற்றும் மார்பு தொடைகளைத் தொட வேண்டும்.

இதை 10-20 நொடிகள் செய்த பின் பழைய நிலைக்கு திரும்பி விடலாம்

அதோ முக மர்ஜாரியாசனம் (Adho mukha Marjariasana)

முதலில்   கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி, குழந்தைகள் தவழும் நிலையில் இருக்க வேண்டும். பின் முதுகை மேலே உயர்த்தி, மலை போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்படி செய்யும் போது, முகத்தை உள்நோக்கி தாடைப்பகுதி மார்பு பகுதியை தொடுமாறு இருக்க வேண்டும். பின்பு முதுகை கீழேநோக்கி தள்ளி, ‘U’ வடிவில் இருக்க வேண்டும்.  அப்படி செய்யும் போது, முகம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து உங்களால் முடிந்த வரை மீண்டும் மீண்டும்  செய்தால் உடல் நலம் பெரும்.

அதோ முக ஸ்வனாசனா (Adho mukha Svanasana)

தரையில் குப்புறப்படுத்துக் உடற்பகுதியை மெதுவாக மேலே உயர்த்த வேண்டும் பின் கைகள் தோள்பட்டைக்கு அருகே இல்லாமல் சற்று தொலைவில் இருக்க வேண்டும். தரையில் உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தில் உடல் முக்கோண வடிவில் இருக்கும் இந்த ஆசனத்தை குறைந்தது 10 முறை செய்ய வேண்டும்.

புஜங்காசனம் (Bhujangasana)

தரையில் குப்புற படுத்து, பின் உள்ளங்கைகளை தோள்பட்டைக்கு அருகே வைத்து உடலை மேலே மெதுவாக உயர்த்தி தரையைத் தொடும். இந்த ஆசனத்தை 3-4 முறை செய்ய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களையும் குளிர்காலத்தில் செய்து வந்தால், உடல் வலியின்றி நன்கு ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

– கோமதிதேவி .பா