கற்பகம் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை கற்பகம் நர்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சுதா அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்: செவிலியர் என்பது பணி மட்டுமல்ல ஒரு சேவை. மனிதநேயத்தோடு நோயுற்றவர்களை காக்கும் அறம் சார்ந்த பணிதான் செவிலியர்களுடையது,

மேலும் நர்சிங் மாணவர்கள் தாய்மொழி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு நாட்டின் மொழியையும் கூடுதலாகக் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உலகம் முழுவதும் காத்துக்கிடக்கிறது என்றும் கூறினார்.

நர்சிங் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் மிக எளிமையான பின்னணியில் இருந்து தான் வருகிறார்கள். அவ்வாறு வரும் செவிலியர்கள் ஏதோ கிடைத்த வேலை போதும் என்று நினைக்கக்கூடாது. சௌகரியம் என்னும் வட்டத்தில் இருந்து வெளியேவந்து தங்களுடைய தலைமைப் பண்பை வளர்த்திக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இருக்கின்ற வேலைவாய்ப்புப் பணிகளைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்தியாவைச் சார்ந்தவர்களாகவும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சர்ந்தவர்களும்தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் தமயந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ஆதி பாண்டியன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.