‘கட்டுப்படுத்துங்கள் & வெல்லுங்கள் நீரிழிவு நோயை’ புத்தக வெளியீட்டு விழா

கோவை, சுகுணா கல்யாண மண்டபத்தில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பது குறித்து ஓம் சக்தி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வேலுமணி எழுதிய ‘கட்டுப்படுத்துங்கள் & வெல்லுங்கள் நீரிழிவு நோயை’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவர், கோவிந்தராஜ் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

முதல் பிரதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் (ஓய்வு) அசோக் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் நல்லுணவுகளை பற்றி மருத்துவர் சிவராமன் பேசினார்.

மேலும், “இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது – அன்றாடப் பழக்கங்களே, அறிவியல் மருத்துவ வசதிகளே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறுதானியங்கள் பொருட்காட்சி இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.