பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல் குறித்து – வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லிகளை பயன்படுத்துதல் குறித்த 21 நாள் பயிற்சியானது பூச்சியியல் துறை , பயிர் பாதுகாப்பு மையம் மூலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியில் ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன் துவக்க விழா, 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பூச்சியியல் துறை பேராசிரியர் புவனேஸ்வரி, பயிற்சி குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு சிறப்பு அதிகாரி மோகன், ஆராய்ச்சி இயக்குனர் இராமராஜூ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பான முறையில் பூச்சி கொல்லிகளை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பூச்சியியல் துறை தலைவர் முத்து கிருஷ்ணன், பூச்சியியல் துறை விஞ்ஞானிகள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.