டெங்கு கொசு போல் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாநகராட்சி பணியாளர்

வரும் முன் பாதுகாத்து கொள்வோம் என்பதன் அடிப்படையில் டெங்கு கொசு போல் வேடமணிந்து மாநகராட்சி பணியாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி பணியாளர் சம்பத் என்பவர் டெங்கு கொசு போல் வேடமணிந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

“நான் தான் டெங்கு… உனக்கு ஊதுவேன் சங்கு” என்ற வசனங்களுடன் டெங்கு கொசு அதிகம் உருவாக கூடிய டயர்கள், பயன்படுத்தாமல் நீர் தேங்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், தேங்காய் மூடிகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் டீ கடைகளிலும் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாநகராட்சி பள்ளிகளிலும் டெங்கு கொசு போல் வேடமணிந்து பள்ளி குழந்தைகளிடையேயும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் முன் பாதுகாத்து கொள்வோம் என்பதன் அடிப்படையில் இவ்வாறான விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.