பல நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி

கோவையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக , தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது . இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக , சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது . மேலும் கடுமையான காற்றின் காரணமாகவும் அருவிக்கு செல்லும் வழிகளில் மரங்கள் முறிந்து விழுந்து இருந்தது . இந்நிலையில் தற்போது மழை மற்றும் காற்றின் தன்மை சீரடைந்து உள்ளதால் , கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது . குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதைகளும் சரி செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் .