விளையாட்டு மற்றும் யோகா மன்ற தொடக்க விழா

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, விளையாட்டுத்துறை சார்பில் செவ்வாய் அன்று “விளையாட்டு மற்றும் யோகா மன்றம் – தொடக்க விழா” நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலுசாமி மற்றும் ஆலோசகரும் செயலாளருமான ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மன்றத்தை துவங்கி வைத்தார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.