இந்துஸ்தான் கல்லூரியில் சாலை விதிகள் குறித்த கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.) மற்றம் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையும் இணைந்து வியாழன் அன்று சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தியது.

இதில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் சிற்றரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் பேசினார். மேலும், இந்நிகழ்வில் கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் சரவணன், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, கணினி துறைத்தலைவர் ரங்கராஜ் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் 280 பேர் பங்கேற்றனர்.