ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் சாதனை

கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள்,  பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்றனர்.

பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் இன்னோவேஷன் எகோசிஸ்டம் என்கிற ஹெல்த்கேர் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும்  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் 300 மேற்பட்ட குழுக்கள் பங்கு பெற்றன. இறுதிசுற்றுக்கு 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிச்சுற்றில் முதல் ஐந்து குழுக்கள் தேர்வாகியதில் இரண்டு குழுக்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.

24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களான ஸ்ரேயா, ஸ்வேதா, வர்ஷினி, பிரகாஷ், சங்கீர்தன் மற்றும் சரத் ஆகியோர் உதவிப் பேராசிரியர் ஸ்ரீவித்யாசக்தி, வழிகாட்டுதலின் பேரில் “ஏன் இண்டிஜினோஸ் நான் இன்வாஸிவ் குளுக்கோமீட்டர்” என்ற தலைப்பில் தங்களின் ஆராய்ச்சி திட்டத்தை சமர்ப்பித்தனர். இறுதிச்சுற்றின் முடிவில், இக்குழு முதலிடம் பெற்று பரிசு தொகை ரூபாய் 5 லட்சம் வென்றனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிமென்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் உடன் மாதம் ரூபாய் 25,000 உதவித்தொகை பெற தகுதி பெற்றனர்.

இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற இக்கல்லூரியின் இரண்டம் குழுவானது தங்களின் ஆராய்ச்சி திட்டத்தை “ஐ.ஓ.டி எனபிலேட் பயோ இம்பிடென்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி பேஸ்ட் ஹியூமன் ஹைட்ரேஷன் மானிட்டர்” என்ற பேரில் சமப்பித்திருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆலோசனை வழங்கிய பேராசிரியர்கரையும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி, கல்லூரி முதல்வர் அலமேலு, கல்லூரியின்   தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.