வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் கேக் மிக்சிங் நிகழ்வு

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதித்துறை சார்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை நினைவூட்டும் வகையில் கேக் மிக்சிங் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பாரம்பரிய பழக் கலவையாக உலர்ந்த வாசனைப் பழங்களும், மசாலாப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன.

உலர் திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், செர்ரி, பப்பாளி உட்பட 15 க்கும் மேற்பட்ட உலர் பழ வகைகள், கொட்டைகள், முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்றவைகளும் உலர்ந்த இஞ்சி, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை மற்றும் சர்க்கரை போன்ற மசாலாப் பொருட்கள் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு ஆல்கஹால் இல்லாத பழச்சாறுகளில் ஊறவைக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி மற்றும் செஃப் ஜேக்கப் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.