மழையால் டை..! தொடரை வென்ற இந்தியா!

IND vs NZ 3rd T20: இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்கள் ஆடியுள்ள நிலையில், மீண்டும் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று தொடங்கியது முதலே மழை குறுக்கிட்டு வந்தது. டி20 போட்டி மழையால் டை ஆன நிலையில், இந்தியா தொடரை வென்றுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கத் தேர்வு செய்தார்.

ஹர்திக் தலைமையில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 49 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார். மறுபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 19ஆவது ஓவரில் இந்திய அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, போட்டியை முழுவதுமாக தன் பக்கம் திருப்பியது.

நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.