சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் யுவா கிளப் எனும் சேவையை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை செய்து வருவதுடன் சிறு வயதிலிருந்து சமூகத்தில் அக்கறை கொண்டவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஜெகேகே முனிராஜ் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசன் கண் மருத்துவமனை மற்றும் ராயல் பல் மருத்துவமனை ஆகியோர் பங்குபெற்று 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் நிறுவனர் சிவநேசன், தலைவர் சசிகலா சத்தியமூர்த்தி, பள்ளியின் முதல்வர் ஸ்ரீவள்ளி, இயக்குனர் ஸ்ரீ நித்தியா, சந்திரன் யுவா பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஷான், அரசன் மருத்துவமனையின் டாக்டர் அபிராமி, ராயல் மருத்துவமனையின் டாக்டர் கௌசல்யா, மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.