தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் ‘பொறியியல் எனும் தொழிற்கல்வியை செயல்முறையில் கற்பது மிக முக்கியம் ” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வரவேற்புரை அளித்தார்.

முதலாமாண்டு துறைத்தலைவர் சிவமணி, மாணவர்கள் எந்த நேரத்திலும் அவர்களுடைய‌ தேவைகள் மற்றும் உதவிகளை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் கேசவமூர்த்தி தொழில்நுட்ப வளர்ச்சியும் அதை எப்படி கையாள்வது என்பது பற்றியும் பேசினார்.

சிறப்பு விருந்தினராக 2022 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் ரவிக்குமார் கலந்துகொண்டு பேசுகையில்: ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது. ஆசிரியர்களை தீக்குச்சி என்று புகழ்ந்தார். மாணவர்களுக்கு தாய்மொழி அறிவு அவசியம் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நகைச்சுவை மிக்க பேச்சால் கலையரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இறுதியாக கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கூறுகையில்: மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்லூரி முக்கியத்துவம் தருகிறது, மாணவர்கள் பெற்றோருக்கு மதிப்பு தர வேண்டும், மாணவர்களே கல்லூரியின் மிகப்பெரிய சொத்து என்று கூறினார். இக்கல்லூரியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும், வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறினார். உங்கள் வாழ்க்கையில் பொறியியல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லை என்று பொறியியலின் தேவை மற்றும் அதன் வருங்கால வளர்ச்சி பற்றி அறிவுறுத்தினார்.