சமூக சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வேர்பல்ஸின் ஃபென்டாஸ்டிக் இண்டிவிஜுவல் விருது

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோ ஜோன் மாலில் ஞாயிற்றுக்கிழமை அன்று வேர்பல்ஸ் கிரியேட்டிவ் கன்சல்டன்ஸ் மற்றும் இங்கிலீஷ் பார்ட்னர் இணைந்து சமூக சேவையில் சிறந்து விளங்கிய 25 நபர்களுக்கு வேர்பல்ஸின் ஃபென்டாஸ்டிக் இண்டிவிஜுவல் விருதுகள் (இணைந்து வழங்கியவர்கள் இங்கிலீஷ் பார்ட்னர்) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வருமான வரித்துறை ஆணையர் பூபால் ரெட்டி, ரேடியோ சிட்டி 91.1 FM கேரளா மற்றும் தமிழ்நாடு பொது மேலாளர் ஜெரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் நிர்மலா, கோயம்புத்தூர் வனப் பிரிவின் உதவிப் காப்பாளர் செந்தில் குமார், இந்து தமிழ் திசையின் சர்க்லேஷன் பொது மேலாளர் ராஜ் குமார், ப்ரோ ஜோன் மாலின் சிஃப் ஹெட் பாபு மற்றும் ப்ரோ ஜோன் மாலின் மார்க்கெட்டிங் ஹெட் ப்ரிங்ஸ்டன் நாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.