கோவை கணபதியில் ‘கே.ஜி ஸ்பெஷாலிட்டி சென்டர்’ திறப்பு

கோவை கணபதி பகுதியில் கே.ஜி மருத்துவமனையின் ‘ஸ்பெஷாலிட்டி சென்டர்’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம்ஆகியோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

கே.ஜி ஸ்பெஷாலிட்டி சென்டரின் திறப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவையின் மையப்பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ளது கேஜி மருத்துவமனை. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான இது கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையானது தற்போது புறநகர் பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவையை வழங்க முனைப்பெடுத்துள்ளது.

அதன்படி, ‘கே.ஜி ஸ்பெஷாலிட்டி சென்டரை’ கணபதியை அடுத்த ப்ரோசோன் வணிக வளாகத்தின் அருகே துவங்கியுள்ளது. 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஏர் கண்டிசன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்பெஷாலிட்டி சென்டர்.

இங்கு ரத்தப் பரிசோதனைகள் செய்வதற்கான லேப் வசதி, எக்ஸ்ரே, இசிஜி, சிடி ஸ்கேன், இருதய கோளாறுகளை பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளன. மேலும், இருதயம், கண், பல், சிறுநீரக மற்றும் நுரையீரல் மருத்துவம் என 25 மருத்துவத் துறைகள் செயல்பட உள்ளன. பெண்களுக்காக 24 மணி நேரமும் பெண் மருத்துவர் பணியில் இருப்பார். குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்குமான சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ‘ஸ்பெஷாலிட்டி சென்டரில்’ சிறிய அறுவை சிகிச்சைகள் உடனடியாக செய்யலாம். பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக நோயாளிகள் உடனடியாக ரேஸ்கோர்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தேவைப்படும் காலத்தில் ஸ்பெஷாலிட்டி சென்டரில் இருந்தவாறே கே.ஜி மருத்துவமனை மருத்துவர்களிடம் ‘ஆன்லைன் கன்சல்டேஷன்’ பெற முடியும்.