தமிழகத்தில் கூட்டுறவு துறை தலை நிமிர்ந்து நிற்கிறது – அமைச்சர் ஐ.பெரியசாமி

69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு கூட்டுறவு சங்கம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மிக அதிகமாக கடன் அளிக்க இருக்கின்றோம்.

இந்த திட்டத்திற்கு அதிக அளவில் கடன் கொடுக்க முதல்வர் சொல்லி இருக்கின்றார். ஏற்கனவே 5000 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு சுபிட்சமாக இருக்கின்றனர். சமத்துவம் இந்த கூட்டுறவில் இருக்கிறது. கூட்டுறவு துறை தலை நிமிர்ந்து நிற்கின்றது.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட இருக்கின்றது. அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது.

ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கக் கூடிய ஓரே மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் 4451 கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்க முயற்சி செய்ய வேண்டும்.

ஆட்சிக்கு வந்த பின் கைம்பெண்களுக்கு வட்டி சதவீதம் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவு துறை முன்னணியில் இருக்கின்றது. தமிழகத்தில் விவசாயிகள் தேசியமயமாக்கபட்ட, வணிக ரீதியான வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். இந்தாண்டு 7300 கோடி கொடுத்துள்ளோம்.

வரும் மார்ச் மாத்த்திற்குள் 12000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 33000 ரேசன் கடைகள் இயங்குகின்றன. இதில் 6900 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றது. ஏற்கனவே கடன் வாங்கிய தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்க இன்று முதல் அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் பணி மாறுதல் தேவைபடுபவர்களுக்கு மாறுதல் வழங்கப்படும். அதிகாரிகள் இதை பரீசிலனை செய்து வழங்குவார்கள். கூட்டுறவு துறையில் என்னென்ன இடர்பாடுகள் இருக்கின்றதோ அதை சரி செய்து கடன் தேவைபடுபவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கோடி பேர் தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கூட்டுறவு துறைக்கு 6000 க்கும் மேல் ஆள் போட முதல்வர் அனுமதி அளித்துள்ளார். நீண்ட காலமாக ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பலன்கள் பெறாமல் இருந்தவர்களுக்கு சிறப்பு அமைப்பு ஏற்படுத்தி நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.