கோவையில் கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு

முன்னணி மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்ஸ் தனது பிரத்யேக ஷோரூமை கோவையில் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

இந்த ஷோரூம் குறித்து கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்ஸ் இயக்குனர் கிஷன் ஜெயின் பேசுகையில்:
எங்களின் பிரத்தியேக ஷோரூம்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் கோல்ட்மெடல் தயாரிப்புகளை பிரீமியம் மற்றும் வசதியான அமைப்பில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம். இந்த ஷோரூம் பரந்த அளவிலான தயாரிப்புகளை ஆய்வு செய்யும் நுகர்வோரின் தேவையை நிவர்த்தி செய்ய உதவும் என்றார்.