கபடி போட்டியில் கே.ஐ.டி கல்லூரி வெற்றி

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 வது மண்டல கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி தலைமை ஏற்றதுவக்க விழாவில் வரவேற்றுப் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 9 வது மண்டலத்தைச் சேர்ந்த 12 கல்லூரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன. இதில் கே.ஐ.டி கல்லூரி மற்றும் நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரி இடையே நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் (47-19) என்ற புள்ளிக்கணக்கில் கே.ஐ.டி கல்லூரி அணியினர் வெற்றி பெற்றது.