எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவக்கிவைத்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர் மற்றும் விஞ்ஞானியுமான வளர்மதி, பேச்சாளர் சுகி சிவம், நடனக் கலைஞரும், நடிகருமான ஜாஃபர், இன்டெல் கார்ப்பரேஷன், இன்டெல் ஆப்டேன் மெமோரி இயக்குனர் சுந்தர் நாராயண சுவாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார், எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன், எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.