
தமிழ்நாட்டில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் என கணிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நாளை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.