அறிமுகமானது வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ்!

தனது புதிய அப்டேடான வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ் என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தியது. மேலும் வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த புதிய அப்டேட் தற்போது தான் பயன்பாட்டிற்கு வருகிறது.  , இது வாட்ஸ் அப்   யூசர்களை அவர்கள் விரும்பும் பல்வேறு வித குழுக்களில் இணைந்து தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும், தங்களுக்குள் விவாதம் செய்யவும் இது மிகச்சிறந்த ஒரு தளமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கம்யூனிட்டிஸ் பற்றி மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில் “வாட்ஸ் அப்பின் புதிய வசதியான கம்யூனிட்டிஸை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

2009-ல் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் வாட்ஸ்அப் கம்யூனிட்டி எனப்படும் இந்த புதிய வசதி மூலம், ஒரு தனிப்பட்ட நபர் ஒரு குழுவாகவும் அல்லது குழுவில் விவாதிக்கப்படும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ் அப் கம்யுனிட்டிஸ் பயன்படுத்தும் நபர்களிடமும் அதன் ஒருங்கிணைப்பாளர்களிடமும் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது சாதாரணமாக வாட்ஸ் அப்பில் இருக்கும் குழுக்களைப் போல் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குழுவில் அதிகப்படியான யூசர்கள் இணைந்து, ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது சம்பவத்தை பற்றி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், மற்றவர் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் ஒரு தளமாக  அமைக்கிறது.

ஐஓஎஸ் யூசர்களுக்கு இந்த கம்யூனிட்டி வசதியை பயன்படுத்துவதற்கு செட்டிங்ஸில் வாட்ஸ் அப் வெப் பட்டனுக்கு அடுத்ததாக இருக்கும் பட்டனை அழுத்தி இதை இயக்கமுடியும்.

நீங்கள் உருவாக்க இருக்கும் கம்யூனிட்டியின் பெயரானது 24 எழுத்துக்களுக்கு மேல் செல்லக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

அதன்பின் பச்சை நிற அம்புக்குறியை அழுத்தி புதிய குழுவை உண்டாக்கவும் அல்லது ஏற்கனவே இருக்கும் குழுக்களை இணைத்துக் கொள்ளவும் முடியும்.

ஒரு யூசர் ஒரு கம்யூனிட்டியில் 50 குழுக்களுக்கு மேல் இணைக்க முடியாது என்பதையும் அதிகப்பட்சம் ஐந்தாயிரம் நபர்கள் வரை மட்டுமே இணைய முடியும் என்பது குறிப்பிடுகிறது.

 

– கோமதிதேவி.பா