தோனியை களமிறக்குங்க – பிசிசிஐ ஆலோசனை

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றனர்.

இந்திய அணி தைரிமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் பெரிய பொறுப்பை கொடுக்கவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவலாக கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளாராக இருப்பதால் அவரது பணிச்சுமை அதிகமாக இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது.

இதனால் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

 

– கோமதிதேவி. பா