வருமான வரியை உயர்த்த கோரி கோவையில் த.பெ.தி.க ஆர்ப்பாட்டம்

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். த.பெ.தி.க பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறும்போது: பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது தவறானது.

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால் வருமான வரி வரம்மை 5 லட்சமாக வைத்து கொண்டு, 8 லட்சம் சம்பாதிப்பாதிக்கும் முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்களை ஏழைகள் என நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே 5 லட்சம் சம்பதிப்பவர்களை பரம ஏழைகள் என்று அறிவிக்க வேண்டும், வருமான வரி உச்ச வரம்பை ரூ. 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தினமும் 23 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என சொல்கின்றனர். ஆனால் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று அறிவித்து இருப்பது தவறானது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். 10 சதவீத இட ஒதுக்கீடு 76 சமூகத்தினருக்கு போவதாக செல்கின்றனர். உண்மையில் அப்படி கிடைக்காது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து ஏராளமான போலீசார் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.